ஓடும் பேருந்தில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுவாரசியமான, பாராட்டும் விதமாக ஒரு சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவின் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
