கேரள மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கேரளத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அண்மையில் 12 வயது சிறுமி ஒருவர்நாய் கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும் கூறியிருந்தார். இது போன்ற காரணங்களால் தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க கேரள அரசு நடவடிக்கை […]
