தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு நிலத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கிருந்த தெருநாய்கள் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதே போன்று அங்கு வளர்க்கும் கோழி, ஆடுகளை தெருநாய்கள் அடிக்கடி கடித்து வருவதாக பொதுமக்கள் புகார் […]
