கொரோனா தொற்றுக்கு பயந்து பொதுமக்கள் தங்களின் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டாகாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பானையங்கால் கிராம பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த […]
