சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]
