தென்மேற்கு பருவ மழையின் காரணமாக முக்கிய அணையின் கொள்ளளவு உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் இருந்தாலும் ,அணையை பராமரிக்கும் பணிகள், நீரின் அளவை கணக்கிடுதல், மற்றும் தண்ணீர் திறத்தல் போன்றவற்றை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இங்கிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மொத்தம் 72 அடி கொள்ளளவை கொண்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை […]
