தென் கொரியாவை பந்தாடிய ‘ஹின்னம்னோர்’ புயலால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா நாட்டை ‘ஹின்னம்னோர்’ புயல் நேற்று முன்தினம் பலமாக தாக்கியது. இந்த புயல் அதிகாலை 4.50 மணிக்கு உல்சான் நகரம் அருகே கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தென் பகுதிகளில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. 3 அடி அளவுக்கு பலத்த மழை பெய்தது. இது போன்று பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. […]
