தமிழகத்தில் தென்னை மர தொழிலாளர்நலனை பாதுகாக்க தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது உடல் ஊனமடைந்தால் அவரின் வாரிசுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு 18000 ரூபாய், உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுக்கு 3000 ரூபாய், இறுதி சடங்கு செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். […]
