தேனியில் தோட்டத்திற்குள் மூதாட்டி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திற்கு அருகே தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பு வழியாக சில நபர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு 70 வயதுடைய மூதாட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தென்னந்தோப்பிற்கு விரைந்து வந்து […]
