தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் சர்ச் தெருவில் பால்குடம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிஷாந்த் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நிஷாந்த் அதே பகுதியில் வசிக்கக்கூடிய வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தெரிந்து இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக […]
