வடகொரியா பொருளாதார தடைகளை நீக்க ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த வடகொரியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. […]
