தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங் பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]
