தென்காசியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்த நாள் முதல் வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே போகவும், வரவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திர பட்டணத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து உள்ளது. இந்த மழையானது […]
