தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது […]
