திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார். இதனிடையே, இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி […]
