பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நகராட்சியில் ஆள்குறைப்பு என கூறி வேலையை விட்டு நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி ஒரு நாள் ஊதியம் 424 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்தந்த பகுதிகளில் […]
