Categories
சினிமா தமிழ் சினிமா

குப்பைகளை பிரித்தெடுக்கும் தூய்மை பணியாளர்…. விழிப்புணர்வு படத்தில் நடிகர் யோகி பாபு….. சென்னை மாநகராட்சி தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் கதாநாயகராகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு தற்போது தூய்மை பணியாளர் வேடத்தில் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதாவது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குறும்படம் இயக்கப்படுகிறது. இந்த படத்தை Urbaser Sumeet […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிணமாக மீட்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்…. விசாரணையில் சிக்கிய கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரம் 1-வது தெருவில் மணிமாறன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி(34) என்ற மனைவி இருந்தார். இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இந்நிலையில் மணலி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பையை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சேகர் (50) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் அடையாறு மண்டலம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின் தெருவில் குப்பை தொட்டியை தூய்மை செய்துகொண்டு இருந்தார். அப்போது புதைமின் வட கேபிள் சரியாக புதைக்கப்படாததால் தூய்மை செய்தபோது சேகருக்கு மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கிவீசப்பட்ட சேகர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனே அங்கு […]

Categories
மாநில செய்திகள்

அடடே… பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தூய்மைப் பணியாளர்… என்ன சப்ஜெக்ட் தெரியுமா…?

20 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து மாணவர்களுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி தூய்மைப் பணியாளர் விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வர கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெல்லி அப்பாத்துரை தூய்மை  பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் சின்ன வயதிலிருந்தே பண்டைய காலத்தில் நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து காசுகள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்ற நாணயங்களை […]

Categories
மாநில செய்திகள்

தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது… தலைமை செயலாளர் பாராட்டு….!!!

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் கணேஷ் ராமன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்கு கீழ் வைத்துள்ளார். இது தெரியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். இதுகுறித்து கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்ணீர் குடிக்க சென்ற தூய்மை பணியாளர்… பரிதாபமாக உயிரிழப்பு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளியில் வேலைபார்க்கும் தூய்மை பணியாளர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியில் உள்ள அருந்ததியர் காலனியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த குருசாமி அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென தவறி தொட்டிற்கு உள்ளே விழுந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தலையில் பலத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கலெக்டர் ஆபீசில்… தூய்மைப் பணியாளர் தற்கொலை… காரணம் என்ன..?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக ஊழியர்கள் மொட்டை […]

Categories
பல்சுவை

“தொழில் பக்தி” தூய்மை பணியாளரின் செயல்….. வைரலான புகைப்படம்….!!

ஆயுத பூஜையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டிக்கும் துடப்பத்திர்க்கும் மாலை போட்டு பூஜை செய்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது தற்போதைய காலம் விழாக் காலம் ஆகும். நவராத்திரியில் தொடங்கி தீபாவளி வரை எங்கு பார்த்தாலும் விழாக்கோலமாக தான் காணப்படும். அதிலும் ஆயுத பூஜை என்று வந்துவிட்டால் தொழிலாளர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக தான் இருக்கும். தங்கள் தொழிலில் பயன்படுத்தும் பொருட்களுக்கு அலங்காரம் செய்து பொட்டு வைத்து மாலை போட்டு கொண்டாடி மகிழ்வார்கள். அவ்வகையில் ஆயுத பூஜையை தூய்மைப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மோதி விபத்து….. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் மரணம்…. தேனி அருகே சோகம்…!!

தூய்மைப் பணியாளர் சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்த மேல்மந்தை பகுதியை சேர்ந்த பரமசிவம் ஒப்பந்த அடிப்படையில் தேவதானப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் தேனியிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பரமசிவன் வாகனத்தின் மீது மோத தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000 த்தை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

ரூ. 2 லட்சம் அறிவித்த அமைச்சர்….! தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் …!!

கொரோனா பாதிப்புக்குள்ளான மாநகராட்சி பணியாளர் 34 பேருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பரவி வரும் கொரோனா தொற்றால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருகின்றனர். இதில் சுகாதாரத் துறை ஊழியர்களுடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளும் பணி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் […]

Categories

Tech |