வனத்துறையினர் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவ மாணவிகள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்ட புறவழிச்சாலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாலிதீன் பைகள், மட்காத குப்பைகள் குவிந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வனத்துறையின் சார்பில் அப்பகுதியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்த தூய்மை பணிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் தொடங்கி புறவழிச்சாலையில் உள்ள வனத்துறை நாற்றுப்பண்ணை வரை நடைபெற்றுள்ளது. மேலும் முகாமில் வனத்துறையினர் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, […]
