தூய்மை இந்தியா திட்டம் U2.0 கீழ் சமூகம், உட்சேர்க்கை கழிவுகள் அற்ற நிலை, நெகிழி கழிவு மேலாண்மை வெளிப்படைத்தன்மையுடன் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் வரவேற்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் முறையிலான தீர்வுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தூய்மை தொழில்நுட்ப சவால் போட்டியில் சிறந்த தீர்வளிக்கும் நபர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
