திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்புக் உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் தூய்மை பணியாளர்கள் கால்வாயில் இறங்கி அடைப்பை சரி செய்து மழை நீரை வெளியேற்றினர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி அவர்கள் தூய்மைப் பணியை […]
