தொடர் மழை பெய்வதால் மானாவாரி பயிர்கள் நாசமாகியுள்ள நிலையில் உரிய நிவாரணம் கேட்டு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாயமே மக்களின் முக்கிய தொழிலாக இருக்கிறது. மேலும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயிறு, உளுந்து, மிளகாய், மக்காச்சோளம் ஆகியன அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பாசிப்பயறு, உளுந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், கடந்த 4 நாட்களாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் […]
