முகக்கவசம் அணியாத 586 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது வெளியில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து அபராதம் விதித்தனர். அதன்படி தூத்துக்குடியில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்ட 19 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 586 பேருக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200 […]
