ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தான் திரும்பி அழைக்கவுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரான நஜிப் அலிகேலின் மகள் 27 வயதான சில்சிலா அலிகேல் ஆவார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கடத்திய கும்பலிடம் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் […]
