காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சஞ்சைராஜ் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தந்தை ஜெயக்கனி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
