கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று […]
