சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
