மதுரை அவனியாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பராசக்தி நகரைச் சேர்ந்த ரத்தினவேல் (50), மனைவி மற்றும் மகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் மர்ம நபர் ஒருவர், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வாலிபர் பார்ப்பதற்கு திருடன் போல இருந்ததால், அவரை உள்ளே வைத்து பூட்டிய ரத்தினவேல் உடனடியாக அவனியாபுரம் […]
