ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. […]
