உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் படிக்கும் மாணவன் சரிவர படிக்காததால் அவரை ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இந்நிலையில் மாணவருக்கு திடீரென ஒரு நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்தோ கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த மாணவன் ஆசிரியரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அதன்பின் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக சுடத் தொடங்கினான். இதைப்பார்த்து […]
