குடிநீர் கட்டணம் செலுத்தாத 11 வீடுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துமாறு காங்கயம் நகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 11 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த 11 வீடுகளில் மொத்தம் நிலுவைத் தொகையாக 66,254 இருக்கின்றது. […]
