சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை நியமித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் […]
