கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி துணை முதல்-மந்திரி இன்று குணமடைந்து வீடு திரும்பினார். டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தன்னை தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 25ஆம் தேதி அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச சிரமம் ஏற்பட்டதால் லோக் நாயக் ஜெயபிரகாஷ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா பாதிப்பு […]
