சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
