தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. இந்த கட்சியில் அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக இருக்கின்றனர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி தான் திமுகவில் எழுந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 5 பொதுச் செயலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் தான் இருக்க வேண்டும். […]
