மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு தருவது பற்றி துணைக் குழு பரிந்துரை வழங்கும். துணைக் குழுவின் உறுப்பினர்களாக 3 துறைகளின் துணை செயலாளர்கள் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, சட்டத்துறைகளின் துணை செயலாளர் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
