மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக மார்கழி மாதத்தில் காலையில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது, மார்கழி மாதம் முழுவதும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் கார்த்திகை, மார்கழி […]
