பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ ஜி.கே மணி தமிழக அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கருதுகிறார் என கூறினார். […]
