மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பஸ்ஸில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு கை கால்கள் இழுத்த நிலையில் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினார். அப்போது அந்தப் பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாவத் (42) என்ற பெண், டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டினார். அதன்பிறகு டிரைவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து […]
