விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, சத்யராஜ், பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . […]
