குருமூர்த்தியின் அவதூறான பேச்சை அதிமுகவினர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அந்த இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம் குறித்துப் பேசியதை கண்டித்து திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நேற்று முன்தினம் சென்னையில் துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளின் நியமனத்தையே கேள்விக்குரிய ஒன்றாக […]
