காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு […]
