சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடமேற்கு திசையில் மேலும் அது நகர்ந்து வட தமிழ்நாடு, […]
