Categories
தேசிய செய்திகள்

“26/11” மும்பையில் தீவிரவாத தாக்குதல்…. பாகிஸ்தானில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு….!!!

பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த குறுஞ்செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பைக்கு அருகே உள்ள ஒரு கடற்கரையில் ஆளில்லாத கப்பல் ஒன்று கரை ஒதுங்கியது. அந்தக் கப்பலில் 3 ஏகே 47 […]

Categories
உலக செய்திகள்

கேமரூனில் போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்…. ராணுவ வீரர் உட்பட 5 நபர்கள் உயிரிழப்பு…!!!

கேமரூனில், போகோஹரம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா, மாலி, நைகர், சாட் மற்றும் கேமரூன் போன்ற நாடுகளை இணைத்து முஸ்லிம் மத அடிப்படையில் அரசாங்கத்தை உருவாக்கக்கூடிய எண்ணத்தோடு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர், இந்த தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்காக அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த தீவிரவாத இயக்கம், பாதுகாப்பு படை வீரர்களையும், மக்களையும் குறி வைத்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டல்…. குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!

தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 9 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் சையது என்பவர் தலைவராக செயல்பட்டுள்ளார். இந்த தாக்குதலை பாகிஸ்தான் நாட்டில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் நடத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக ஹபீஸ் சையதிற்கு என்ற தீவிரவாதிக்கு ஏற்கனவே பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிய வழிபாட்டு தலத்தில் நடந்த பயங்கர தாக்குதல்…. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் குருத்வாரா என்னும் சீக்கிய வழிபாட்டுத்தலம் இருக்கிறது. அங்கு நேற்று காலையில் 30 நபர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கு திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததோடு, 7 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் பற்றி […]

Categories
உலக செய்திகள்

உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும்… பாகிஸ்தானிற்கு தொடர்பு இருக்கும்… மதுசூதனன் அதிரடி…!!!

ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதங்களின் நடுவில், “மக்களுக்கான பாதுகாப்பு, நகரங்களில் போர்- நகர்ப்புற அமைப்புகளில் மக்களின் பாதுகாப்பு’” என்பது தொடர்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐநாவிற்கான பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர தூதரான முனீர் அக்ரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தூண்டக்கூடிய விதத்தில் கருத்து கூறினார். உடனே, ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத செயல்களுக்கு  நிதி, ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

“புலம்பெயர்ந்தோர் முகாம் மீது பயங்கர தாக்குதல்!”… 22 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

காங்கோவில் புலம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்  22 நபர்கள் பலியாகியுள்ளனர். காங்கோ என்ற மத்திய ஆப்பிரிக்க நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருவதால், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள். மேலும், “காங்கோ வளர்ச்சிக்கான கூட்டுறவு” என்ற பெயரில் அங்கு தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இதேபோன்று, காங்கோவிற்கு அருகில் இருக்கும், உகாண்டாவிலும், “கூட்டணி ஜனநாயக படை” என்னும் தீவிரவாத அமைப்பு இரண்டு நாடுகளின், பொதுமக்களையும், பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

“பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!”.. பாதுகாப்பு படையினர் உட்பட 19 பேர் உயிரிழப்பு..!!

பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் உட்பட 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பர்கினோ பசோ, மாலி மற்றும் நைஜீரியா நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கிறது. இங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, தீவிரவாத தாக்குதல்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள சமண்டென்ஹா என்ற மாகாணத்தின் ராணுவ முகாமிற்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

நைஜர் நாட்டில் தீவிரவாதிகள் அட்டூழியம்.. கண்மூடித்தனமான தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழப்பு..!!

நைஜர் நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 37 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா உட்பட பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள், அரசபடை மற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நைஜரின் டில்லெப்ரி மாகாணத்தில் இருக்கும் டேரி டே கிராமத்தினுள் தீவிரவாதிகள், துப்பாக்கிகளுடன் நேற்று புகுந்துள்ளார்கள். அதன்பின்பு, அவர்கள் அங்கிருந்த மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 37 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

5 கிராமங்களை சூறையாடிய தீவிரவாதிகள்…. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்….35 பேர் உயிரிழப்பு….!!

கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுவது, வீட்டுக்குள் புகுந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கி ஆயுதங்களுடன் வந்தனர். இதனைத் தொடர்ந்து ஷாம்பாராவில் மாராடூன் என்ற கிராமத்தில் உள்ள அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளியதோடு குடிசைகளையும் தீ வைத்து எரித்தனர்.  […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் தாக்குதல்….வெற்றியை நிலைநாட்டி வரும் பாதுகாப்பு படை…. 20 தலிபான்கள் உயிரிழப்பு….!!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 20 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. மேலும் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரைத் தாக்கி நகரங்களை கைப்பற்ற பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் தொடர்ந்து தலிபான் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தாகர் பிராந்தியம் பகுதியில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் நுழைந்து தீவிரவாதிகள் அட்டூழியம்.. குழந்தைகள், செவிலியர்கள் கடத்தல்..!!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து 3 குழந்தைகளையும், 5 செவிலியர்களையும் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹரம் போன்ற பல தீவிரவாத அமைப்புகள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களை கடத்திச்சென்று கைதிகளாக வைத்து அரசாங்கத்தை மிரட்டி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி நைஜீரியாவில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நுழைந்து மாணவ, மாணவிகளை கடத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் உள்ள ஷானியா என்ற நகரத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

130 பேரை கொன்ற சிறுவர்கள்.. அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் 130 பேரை கொலை செய்தவர்கள் 12-14 வயதுடைய சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புர்கினா பாசோ அரசு, சிறுவர்கள் தான் 130 பேரின் கொலைக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று Solhan என்ற கிராமத்தில் திடீரென்று துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், கண்ணில் பட்ட மக்களை சுட்டு தள்ளினார்கள். மேலும் கிராமத்தில் தீ வைத்துள்ளனர். இதில் சுமார் 130 நபர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நாட்டில் நடந்த மிக பயங்கரமான […]

Categories
உலக செய்திகள்

புர்கினா பாசோ என்ற நாட்டில் கொடூர தாக்குதல்.. காவல்துறை அதிகாரிகள் 11 பேர் கொலை..!!

புர்கினா பாசோவில் திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில்,காவல்துறையினர் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து அல்கொய்தா மற்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த ஆயுத கும்பல், தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தற்போது வரை 1,400 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சோல்ஹான் என்ற கிராமத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 138 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில் யிர்கோ என்ற […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை.. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தி..!!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்கள் மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையில் இருக்கும் அமெரிக்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் கொரோனா அதிகரித்து வருவதால், ஏற்கனவே இலங்கை செல்லும் மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்திருந்தது. இது மட்டுமல்லாமல் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்க்கெட்டுகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்…. தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 30 பேர் உயிரிழந்த சோகம்….!!

ஆப்கானிஸ்தானில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்ததில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் மாளிகை அருகே தீவிரவாதிகள் கார் முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இந்த  தாக்குதலில் விருந்தினர் மாளிகை ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அருகே இருந்த பல கட்டிடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட 30 வே பலியாகினர் என […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கை அலுவலகம் முன்பு …. தீவிரவாத தாக்குதல் நடத்திய …. இளைஞர் கைது ..!!

 இளைஞர் ஒருவர் பத்திரிக்கை அலுவலகம் முன்பு தீவிரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பாரிசில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தாக்குதலில் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் சாஹீர் ஹஸன் முஹம்மது (25) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது தீவிரவாத தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

அந்நாட்டுடன் கூட்டணி…. அதற்கு பதிலடி கொடுத்தோம்…. வெளியான பகீர் தகவல்…!!

மர்ம நபர்கள் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலையடுத்து ஆஸ்திரிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றொருவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவரின் இடுப்பில் வெடிக்கும் பெல்ட் அணிந்திருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

அந்த நாடுதான் டார்கெட்…. தாக்குதல் நடத்த தயார்…. 20 வயது வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம் …!!!

தீவிரவாதம் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்த வாலிபரின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனியில் Badenwurttemberg மாகாணத்தில் காவல்துறையினர் கடந்த 30ம் தேதியன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து 20 வயது வாலிபரை தீவிரவாத தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த வேண்டும் மற்றும் அது போன்ற தீவிரவாத தாக்குதலில் நானும் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலின் […]

Categories
உலக செய்திகள்

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரி…. பல தாக்குதல்கள் நடக்கும்…. அமைச்சரின் கருத்தால் பதட்டம் …!!!

நாட்டில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் நைஸில்லில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் நுழைந்த நபர் ஒருவர், அங்கு ஒரு பெண்ணின் தலையை வெட்டி துண்டித்து கொன்றுவிட்டு மேலும் இரண்டு பேரையும் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்துறை அமைச்சரரான ஜெரால்ட் டர்மனின், “நாம் நாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள எதிரிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளோம். இதனால் பிரான்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்… “நாடகமாடும் நாடு”.. மத்திய அமைச்சர் விமர்சனம்…!!

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தீவிர வாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் – சீனா ஆப்கானிஸ்தான் – தலிபான் போன்ற நாடுகளுக்கு இடையே தீவிரவாத தாக்குதல் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பேற்க எந்த ஒரு தீவிரவாத அமைப்பு முன்வரும் நிலையில் இல்லை. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளும் இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அமைச்சர், தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

தலிபான் பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. கோபத்தில் துப்பாக்கியை கையில் ஏந்திய சிறுமி… 2 பேர் சுட்டுக்கொலை…!!

பெற்றோர்களை கொன்ற தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் உள்ள கிரிவா கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி க்வமர் கல். ஆப்கான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் சிறுமியின் பெற்றோரை சென்ற வாரம் தாலிபன் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அந்தத் தாக்குதலில் தப்பித்த சிறுமி கல் தனது வீட்டில்  பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளில் இரண்டு பேரை அப்போதே […]

Categories

Tech |