எண்ணெய் கிணறுகளை இலக்காக வைத்து வீசப்பட்ட ராக்கெட் வெடிகுண்டை சவுதியின் கூட்டுப்படைகள் நடுவானில் இடைமறித்து தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பல வருட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனையடுத்து சவுதியின் கூட்டுப்படைகள் ஹவுதி தீவிரவாதிகள் மீது வான் வழியாகவும் நிலம் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி […]
