பிரபல நாட்டில் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய விலை உயர்வின் காரணமாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை ரகசிய உளவாளிகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. […]
