கால்நடை தீவன பயிர்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டதனால் பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி 2021- 2022 ஆம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டது. இந்த மாவட்டத்தில் உள்ள குரும்பேரி பகுதியில் […]
