கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் இரண்டு மாதங்களாக தீவனங்கள் இன்றி நடுக்கடலில் தத்தளித்து வந்த அவலநிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 895 கால்நடைகளுடன் துருக்கியை நோக்கி சென்றது. ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவி வருகிறது. அதனால் கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கரைக்கு வர துருக்கி அரசு தடை விதித்திருந்தது. இதனால் அந்த […]
