தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கி வைத்தார். […]
