Categories
உலக செய்திகள்

3 குற்றவாளிக்கு மரண தண்டனை…. பரபரப்பு தீர்ப்பளித்த நீதிபதிகள்….!!

வங்காளதேசத்தில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. வங்காளதேச விடுதலைப்போர் 1971ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த பயிற்சியை முடிக்காமல்  கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்நிலையில் சுதந்திர  வங்காளதேசத்தை உருவாக்க முயற்சி செய்த கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரில் கலந்துகொண்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு…. எஸ்.பி.வேலுமணி வழக்கில் இன்று தீர்ப்பு…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ் பி வேலுமணி சுமார் 50 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்பீடு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அடக்கம் செய்தது. இதுதொடர்பாக சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்…. மசூதி வளாகத்திற்கு சீல்…. நீதிமன்றத்தின்…. அதிரடி தீர்ப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக ஞானவாபி […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வழக்கு….. சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:7.5 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கு… ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு…!!!!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]

Categories
உலக செய்திகள்

வாயில்லா ஜீவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி…. பிரபல நாட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

தனது உரிமையாளரை விட்டு பிரிந்த குரங்கு குட்டி வனவிலங்கு பூங்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்குவடார் நாட்டில் ஆனா பியட்ரிஸ் என்ற பெண் 18 வருடங்களுக்கு முன் ஒரு மாத குரங்கு குட்டியை வனத்திலிருந்து எடுத்து வந்து ஈஸ்ட்ரெலிட்டா  என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோத செயல் எனக் கூறி அதிகாரிகள் அங்கிருந்த குரங்கு குட்டியை விலங்குகள் பூங்காவிற்கு எடுத்து சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு இதை செய்யும் என நம்புகிறோம்… பாமக அன்புமணி சொன்ன காரணம்…!!!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்ற இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இதில் சில அம்சங்களும் இருக்கிறது. 10.5 செய்து வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

“மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்” ஒருமனதாக முன்மொழிந்தவர்களுக்கு நன்றி – முதல்வர் ஸ்டாலின்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அமைந்துள்ள மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட நிதி ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. ஆனால் தமிழக அரசு கர்நாடகாவின் இந்த செயலுக்கு பலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் ஒன்று மேகதாது அணை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் உரையாற்றியபோது, “மேகதாது அணை தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றை நமது நீர்வளத்துறை அமைச்சர் கொண்டுவந்து அதனை அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் தனது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்” திட்டம்…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

முப்படைகளிலும்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு கடந்த 2015 இல் அமல்படுத்திய “ஒரே பதவி ஒரே ஓய்வூதிய கொள்கை” செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து இந்திய ஓய்வு பெற்ற வீரர்கள் இயக்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் இதை டி.ஒய் சந்திர சூட், சூர்ய காந்த்,விக்ரம் நாத், ஆகியோரை கொண்ட  கொண்ட அமர்வு […]

Categories
தேசிய செய்திகள்

“நல்லா ஏமாத்திட்டாங்க” நீதிமன்றத்திற்கு ஓடிய கணவர்… அதிர்ச்சி பின்னணி…!!!!

ஆணுறுப்பு இருக்கும் பெண்ணை தனக்கு ஏமாற்றி திருமணம் செய்து விட்டதால் விவாகரத்து வழங்கும்படி கணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்று. அவர் ஒரு பெண் அல்ல எனவும் அவருக்கு தெரியவந்தது. பரிசோதனையில் அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. மூன்று […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் தொடர்ந்த மனு மீதான வழக்கு… நாளை இடைக்கால உத்தரவு…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியினை ரஷ்யா  நெருங்கியுள்ள நிலையில், ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாற்றி உக்ரைன் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் உக்ரைன்  தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.  ரஷ்யா  இனப்படுகொலை நடத்துவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: இன்று வெளியாகும் தீர்ப்பு…. பெங்களூருவில் 144 தடை உத்தரவு…!!!

ஹிஜாப் விவகார வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை10.30 மணி அளவில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பெங்களூர், மங்களூர் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் நேற்று மாலையில் […]

Categories
மாநில செய்திகள்

சிம்பு வழக்கு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்திற்கு சிம்பு பேசப்பட்ட சம்பளம் எட்டு கோடி என்றும் ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு கோடியே 50 லட்சம் மட்டும் அளித்ததாகவும் சிம்பு தரப்பு  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. இதற்கு பதிலடியாக மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் அவதூறு செய்தி பரப்பியதாக ஒரு கோடி ரூபாய் கேட்டு அவர் மீது சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் ஜாமின்… மத்திய அரசு எதிர்ப்பு…!!!!

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை  கொலை செய்ய முயன்றதாக  கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வரும் காலிஸ்தானை  தனி நாடாக வேண்டும் என்று கோரிய புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி இருந்தார். அந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய கோகுல் ராஜ் மரணம்…. இன்று காலை 11 மணிக்கு…. நீதிபதி அறிவிக்கும் தண்டனை விபரம்….!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

“கொலை வழக்கு”….. இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!!

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதியில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கனகாம்பாள், பஞ்சவர்ணம் போன்றோரை கொலை செய்த வழக்கில் காளிமுத்து என்பவருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. அந்த வகையில் பஞ்சவர்ணம் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், லல்லன்பாய் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு…. 11 பேரும் குற்றவாளிகள்…. அதிரடி தீர்ப்பு….!!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் . இவர்  நாமக்கல் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலை வேறு, உடல் வேறு என கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறொரு பட்டியல் இனத்தவர் என்பதால் இவருக்கும் ஒரு பெண்ணுக்கு மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாமனார் வீட்டில் வசிக்க…. மருமகளுக்கு உரிமை இல்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மாமியார், மாமனாருடன் கூட்டுக்குடும்பத்தில் வாழ மருமகளுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணவரின் தந்தைக்கு சொந்தமான வீட்டில் இவர்கள் கூட்டுக் குடித்தனம் நடத்தி வந்தனர். இருவரின் மோதலுக்கு பிறகு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழப் பிடிக்காத கணவர் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மருமகள் தனக்கு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் வழக்குகளில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!” திடீரென ராஜினாமா….!!காரணம் என்ன..??

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்கான தீர்ப்பு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவால் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை ஆகும். விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என தீர்ப்பளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க…! பென்ஷன் தொகை உயர்வு…? ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!!!

நீண்ட நாட்களாக ஓய்வூதியத்திற்கு நடைபெற்றுவரும் வழக்கின்  தீர்ப்பு ஊழியர்களுக்கிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் ஓய்வூதியத் திட்டம் 1995 எண்ணிக்கையில் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த்துள்ளனர்.  இந்நிலையில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும்  லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. என்னவென்றால்  அவர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதே அடிப்படை சம்பளத்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மத உடைகளுக்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தீர்ப்பு வரும் வரை மதத்தை குறிக்கும் உடைகளை அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் எடுத்து வரும் ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெறும் எனவும், கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப், காவி துண்டு எதுவும் அணிந்து வரக்கூடாது…!!” உயர்நீதிமன்றம் அதிரடி….!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இஸ்லாம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹிந்து மாணவ-மாணவிகள் காவி உடை அணிந்து வந்து போராட்டத்தில் இறங்கினார். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

டிவி பார்க்க வந்த சிறுமிக்கு…. பாலியல் வன்கொடுமை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் உறவுக்கார சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரப்பை எற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்பவர் வீட்டிற்கு உறவுக்கார சிறுமி ஒருவர் டிவி பார்க்க வந்துள்ளார். அப்போது ஆதர்ஸ் வீட்டில் யாரும் இல்லை. அந்நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீட்டில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்ற சிறுமியை மிரட்டி உள்ளார். பின்னர் அச்சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையறிந்த பெற்றோர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…! 3ஆண்டு வழக்கில் தண்டனை… சேலம் நீதிமன்றம் அதிரடி ..!!

சிறுமிக்கு வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு உத்தரவியிட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள வெள்ளரிவெள்ளி சுண்ணாம்புக்காரன் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் 20 வயது உடைய மகன் பிரசாத்.  இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெற்றோர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது  செய்த்து சிறையில் அடைத்தனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா.அதிகாரிகள் கொலை வழக்கு….”51 பேருக்கு தூக்கு”….. ராணுவ கோர்ட் அதிரடி..!!

ஐநா அதிகாரிகள் 2 பேரை கொன்ற குற்றவாளிகள்  51 பேருக்கு  நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவானது.   இந்த கிளர்ச்சியாளர் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த குழுக்களை ஒழிப்பதற்காகவும் ,   நாட்டில்  அரசியல் நிலைத்தன்மையை மீட்டேடுத்து அமைதியை ஏற்படுத்தவும்,  உள்நாட்டு படையுடன் ஐநா படையினரும் சேர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இவர “ஜெயில்ல தூக்கிப் போடுங்க”…. அரச குடும்பத்திற்கே விற்பனையா…? வசமாக சிக்கிய சுவிஸ் நாட்டவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 2018 ல் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சுமார் 6,70,000 ஆயிரம் பிராங்குகள் மதிப்பிற்கு சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 56 வயதுடைய நபரொருவர் ஜெனிவாவிலுள்ள துப்பாக்கி விற்பனை மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாடகை வழக்கு…. “120 நாட்களில் தீர்ப்பு”…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை 120 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு கெடு கொடுத்துள்ளது. தமிழகத்தில் இடங்களை வாங்கி வீடுகளை கட்டி அதனை வாடகைக்கு விடும் வழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதனை வாடகைக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். பல இடங்களில் எழுத்துப்பூர்வமான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வீடு மனைகள் வாடகைக்கு விடப்படுகின்றது. இதனால்  உரிமையாளர் வாடகைதாரர் இடையே எழும் பிரச்சனைகளை தீர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்கு உயிரிழப்புக்கு நீங்கதான் பொறுப்பு…. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்ததை மிதித்ததால் 1 ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை உயிரிழந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்தது. அந்த விசாரணைக்கு பின்னர் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த ஆணையின்படி, வனப்பகுதியில் உள்ள மின்சார […]

Categories
மாநில செய்திகள்

“27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும்”…. சற்றுமுன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஓரிரு நாளில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 3-ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும். மேலும் மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஓ.பி.சி பிரிவினருக்கு 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமான வரையறை நடப்புக் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவில் வழக்கு…. 23 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு…. ஒரு சுவாரஸ்யமான ரிப்போர்ட்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான 3402 ஏக்கர் நிலம் குறித்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்கே நிலம் சொந்தம் என தீர்ப்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3402 ஏக்கர் நிலம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை, தேவஸ்தான செயல் அலுவலர், இணை செயல் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் கோவிலுக்கே சொந்தம் என திருப்பதி கங்காராம் மடத்தின் […]

Categories
மாநில செய்திகள்

இஸ்லாமிய பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

18 வயது நிரம்பாத நிலையிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் மற்றும் இஸ்லாமிய திருமணத்திற்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு விவரம் என்னவென்றால், 36 வயதான இஸ்லாமிய நபர் 17 வயதுடைய சிறுமியை கடந்த ஜனவரி மாதம் 21_ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

“ஆங் சான் சூகி வழக்கு”….. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி க்கு எதிரான புதிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்தது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ராணுவம் கலைத்து ஆட்சியை ஆக்கிரமித்தது. இதில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி இந்த நடவடிக்கையை ராணுவம் செய்தது. இதனையடுத்து அரசின் தலைமை ஆலோசகரும், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவருமான ஆங் சான் சூகி மீது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டுமா?…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையிலே இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலே முதல்முறை….! ஒரே நாளில் தீர்ப்பு…. கற்பழிப்பு வழக்கில் செம அதிரடி…!!

இந்தியாவில் முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒரு நபர் கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு மறுநாளே பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு அராரியா  போக்ஸோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருதரப்பிலும் வாதம் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது… உத்தரவு நீட்டிப்பு… உயர்நீதிமன்றம்…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உத்தரவை நீடிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பணம் மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு, முன்பாகவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து… பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.இந்நிலையில் எம் பி சி பிரிவில் இருந்த வன்னிய சமூகத்திற்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எம் பி சி பிரிவில் உள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பெகாசஸ் மென்பொருள் விவகாரம்… நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!!

பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலமாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .ஆனால் இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் விரிவான பதில் மனு அளிக்க மத்திய அரசு தரப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா தொடர்ந்த வழக்கு…. நீதிபதி கூறிய பதில்…. வெளியான தகவல்….!!

சமந்தா தொடர்ந்த வழக்கிற்கு நீதிபதி சொன்ன பதில் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார். இந்நிலையில், தன்னை பற்றி தவறான தகவல்களை பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

‘வா’ ‘போ’ அப்படியெல்லாம் இனி பொதுமக்களை பேசக்கூடாது… காவல்துறைக்கு டி.ஜி.பி. அதிரடி உத்தரவு…!!!

பொதுமக்களை இனி காவல்துறையினர் ஒருமையில் அழைக்க கூடாது என கேரள டிஜிபி அணில் காந்த் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகன் முன்பு போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் போலீசாரிடம் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்ற கருத்தை தெரிவித்தார். சமூகத்தில் அனைத்து தரப்பினரையும், போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி… உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!!

கொரோனாவுக்கு மருந்தாக சிவப்பு எறும்பு சட்னியை பரிந்துரைக்க வேண்டிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் தடுப்பூசி போடும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எரும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். சட்னியுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதனை பயன்படுத்துகின்றனர். மேலும் ஒடிசாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் விருப்பமில்லாமல்…. கணவன் செயல்பட்டால்…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

கணவன் மனைவி இடையில் யாராவது ஒருவருக்கு விருப்பமில்லாமல் பாலுறவு நடைபெறுவது தொடர்பாக பல்வேறு விதமான வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கபட்ட மனைவி ஒருவர் தன்னுடைய கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் இயற்கைக்கு எதிராக கணவர் தன்னிடம் உடலுறவு வைத்துக் கொண்டதால் அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் நோட்டில் காந்தி படம் மட்டும் இருக்கும்… ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு…!!!

இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை அச்சிடக்கோரி தொடரப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்ப பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், அவரின் தியாகம் பற்றி தற்போதைய இளைஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொலை வழக்கு…. 7 பேருக்கு தூக்குத்தண்டனை பரபரப்பு தீர்ப்பு….!!!

கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என 20க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில், அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் […]

Categories
உலக செய்திகள்

சிறுவனிடம் பாலியல் தாக்குதல் நடத்திய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள pee Ridge என்னும் பகுதியில் ஆஸ்டன் ஹில் என்னும் 32 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனினுடைய உடையை கழட்டி பாலியல்ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனிடம் இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்…. மும்பை உயர்நீதிமன்றம்…..!!!!

பிச்சைக்காரர்களுக்கும் மூன்று வேளை சத்தான உணவு, சுகாதாரமான தண்ணீர், தங்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் எல்லாவற்றையும் அரசால் இலவசமாக கொடுக்க முடியாது. பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி கூறுகையில், ” அவர்களும் (பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள்) கண்டிப்பாக நாட்டுக்காக உழைக்க வேண்டும். எல்லோரும் உழைக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

கஞ்சாவை பயிரிடுவதும் குற்றமல்ல…. மெக்சிகோவில் பரபரப்பு தீர்ப்பு….!!!!

மெக்சிகோவில் இளைஞர்கள் போதைக்காக கஞ்சா பயன்படுத்துவது, பயிரிடுவதில் குற்றம் அல்ல என அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்நாட்டில் இனி ஒவ்வொரு நபரும் 28 கிராம் கஞ்சாவை கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். அதனைப்போலவே தங்களின் தேவைக்காக வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். அதேசமயம் பொது வெளியிலும் குழந்தைகள் முன்பும் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மற்ற நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

கள்ளநோட்டு கொடுத்ததாக புகார்…. கொடூரமாக கொலை செய்த காவல்துறை அதிகாரி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் காவல்துறையினர் செய்த கொடூரக் கொலை வழக்கிற்கு அப்பகுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மினிசோட்டாவில் சார்ஜ் பிளைட் என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த வருடத்தின் மே மாதத்தில் அப்பகுதியிலிருக்கும் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது அவர் கொடுத்த பணத்தில் சுமார் 20 டாலர்கள் கள்ள நோட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு கடை உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் டெரிக் சாவின் தலைமையிலான 4 காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதன்பின் டார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுமிக்கு… பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொடூரத்தின் உச்சம்..!!

பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுமியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 26 வயதான பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 8 வயது சிறுமிக்கு மதம் சம்பந்தமாக ஒரு பாடம் ஒன்றை நடத்தியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதை என்ன என்று புரியாமல் உணர்ந்த அந்த சிறுமி தனது மாமாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். இதைக் […]

Categories

Tech |