கோவையில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சாயம்மாள்(85). சம்பவத்தன்று இவரது வீட்டில் திடீரென மின்சார நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்துள்ளார். மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வந்த தீ எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று அவரது உடல் முழுவதும் நெருப்பு பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் […]
